Home நாடு அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை: பாஸ் இளைஞர் பிரிவு கோரிக்கை

அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை: பாஸ் இளைஞர் பிரிவு கோரிக்கை

528
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 5 – துன் மகாதீர் கூறியுள்ள கருத்தின் எதிரொலியாக, அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை என பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தி உள்ளது.

இக்கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதமர் கூறியுள்ள கருத்துக்களை காவல்துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத வேண்டும் என அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் சுகைசான் கய்யாட் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையில் அவர் மனுவும் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

PAS-Logo-Slider“முன்னாள் பிரதமரான மகாதீரின் அறிக்கை மிக முக்கியமானது. இது தொடர்பாக காவல் துறை  மிக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லையேல் இது தேவையற்ற யூகங்களுக்கு வழிவகுக்கும்,” என்று டாங் வாங்கி காவல் நிலையத்தின் முன்பு செய்தியாளர்களிடம் சுகைசான் தெரிவித்தார்.

இதற்கிடையே, இச்சந்திப்பின் போது உடன் இருந்த பாஸ் தலைமைச் செயலாளர் ராஜா அகமட் இஸ்கண்டார், அல்தான் துயா கொலை வழக்கு தொடர்பில் உரிய தகவல்கள் இருப்பின் காவல்துறையினரின் விசாரணைக்கு துன் மகாதீர் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

“இது ஒரு தேசிய விவகாரம். நாட்டின் சாதாரண குடிமகன் இந்தக் குற்றச்சாட்டை கூறவில்லை. நாட்டின் ரகசியங்கள் குறித்து நன்கு அறிந்துள்ள முன்னாள் பிரதமர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. வலுவான ஆதாரங்கள் இல்லாமல் அவர் எதையும் அவ்வளவு சுலபமாகக் கூற மாட்டார்,” என்றார் ராஜா அகமட் இஸ்கண்டார்.

அல்தான் துயா கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் குறித்து பொது மக்கள் குழப்பம் அடைந்திருப்பதாகவும், அவரைக் கொல்ல உத்தரவிட்டது யார் என்ற கேள்வி இன்னும் நிலவுவதாகவும், கடந்த வியாழக்கிழமை தனது வலைப்பக்கத்தில் மகாதீர் பதிவிட்டிருந்தார்.