Home வணிகம்/தொழில் நுட்பம் ஏப்ரல் 10 முதல் ‘ஆப்பிள் வாட்ச்’சின் முன்பதிவு தொடங்குகிறது!

ஏப்ரல் 10 முதல் ‘ஆப்பிள் வாட்ச்’சின் முன்பதிவு தொடங்குகிறது!

686
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 5 – ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் எதிர்வரும் 10-ம் தேதி நள்ளிரவு முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

apple-watch-selling-pointsதிறன்பேசிகளுக்கு நிகராக பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் ஆப்பிள் வாட்ச் என்ற கைக்கெடிகாரங்கள் மீதான எதிர்பார்ப்புகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவைப் பொருத்தவரையில் ஐபோன் பயனர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்பிள் வாட்ச்சை வாங்குவதற்கு தயாராகி வருகின்றனர். பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் நிலவுவதால் ஆப்பிள், நள்ளிரவு முன்பதிவை தொடங்க தீர்மானித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகள் ஆப்பிள் இணையப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக தனது தயாரிப்பினை வாங்குவதற்கு முன் பயன்படுத்திப் பார்ப்பதற்கும், தொட்டு உணரவும் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கும். இம்முறை அதிகபட்ச எதிர்பார்ப்புகள் நிலவுவதால், சோதனை செய்ய விரும்பும் பயனர்கள் அதற்கான அனுமதியை ஆப்பிள் ஸ்டோரில் முன்கூட்டியே பெற வேண்டும்.

#TamilSchoolmychoice

18-காரட் தங்கத்தால் ஆன ஆப்பிள் வாட்ச்சையும் பயனர்கள் 30 நிமிடங்களுக்கு பரிசோதனை செய்யலாம், ஆனால் அதற்கு 10,000 டாலர்கள் முன் பதிவு (ப்ரீமியம்) கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் ஆப்பிள் வாட்ச் எதிர்வரும் 24-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஆசிய பயனர்கள் இதற்காக மேலும் ஒன்றிரண்டு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

apple watch3w