Home தொழில் நுட்பம் புதுமைகளைப் புகுத்தும் மைக்ரோசாப்ட்டிற்கு வயது 40 – பில் கேட்ஸ் உற்சாகம்!

புதுமைகளைப் புகுத்தும் மைக்ரோசாப்ட்டிற்கு வயது 40 – பில் கேட்ஸ் உற்சாகம்!

757
0
SHARE
Ad

gates-and-allenவாஷிங்டன், ஏப்ரல் 5 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், நேற்று தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி, 20 வயது இளைஞன் பில் கேட்ஸ் தனது நண்பர் பால் கார்ட்னர் ஆலனுடன் இணைந்து உருவாக்கிய சிறிய நிறுவனமான மைக்ரோசாப்ட் இன்று தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

நிறுவனத்தின் 40-வது பிறந்த நாளை முன்னிட்டு பில்கேட்ஸ், தனது ஊழியர்களுக்கு பாராட்டு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளார். கேட்ஸ் அனுப்பிய அந்த மின்னஞ்சல், ஊழியர்கள் பலரால் டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலில், “ஆரம்பத்தில் நானும் ஆலனும் ஒவ்வொரு வீட்டு மேசையிலும் கணினி இடம் பெற வேண்டும் என்ற இலக்குடன் எங்கள் பயணத்தை துவக்கினோம். அத்தகைய துணிச்சல் மிக்க எண்ணத்தை அனைவரும் கேலி செய்தனர். இது சாத்தியமில்லை என்று கூறினர். ஆனால் அதன் பிறகு கணினித் துறையில் அதிவேகமான மாற்றங்கள் அரங்கேறின. அதனை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. இந்த புரட்சியில் மைக்ரோசாப்ட்டின் பங்கை நினைத்துப் பார்க்கையில் பெருமையாக இருக்கின்றது.”

#TamilSchoolmychoice

“கடந்த காலத்தைவிட எதிர்காலத்திலேயே நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் கணினித் துறையில் மேலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அதற்கு நாம் தயாராக வேண்டும். அதற்கு சத்யா நாதெல்லாவின் தலைமை மிகச் சிறப்பாக உதவும்” என்று கூறியுள்ளார்.