Home படிக்க வேண்டும் 2 “RM” – வரிசை கார் எண்களுக்கு 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் முன் பதிவு ஏலம்!

“RM” – வரிசை கார் எண்களுக்கு 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் முன் பதிவு ஏலம்!

695
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 6 – மலேசியர்களுக்கு கார் எண்களின் மேல் உள்ள பைத்தியக்காரத்தனமான விருப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. சில குறிப்பிட்ட எண்களுக்கு இலட்சக்கணக்கான ரிங்கிட் வரை முன் பதிவுப் பணம் செலுத்தி கார் எண்களை முன்கூட்டியே உறுதிப்படுத்துவது என்பது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் பெர்லிஸ் மாநிலத்தில் வெளியிடப்படும் RM என்ற வரிசை கார் எண்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் மோகம் ஏற்பட்டு, இதுவரை 1,507 விண்ணப்பங்கள் ஏலம் முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலாகும்.

Carசாலைப் போக்குவரத்து இலாகாவின் வாகனப் பதிவு எண்கள் வரலாற்றில் இந்த அளவுக்கு எந்த வரிசை எண்களும் இதுவரை ஏலத்திற்கு விலை போனதில்லை.

#TamilSchoolmychoice

ஏல விண்ணப்பங்களுக்கான முன்பதிவு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி மார்ச் 10ஆம் நிறைவு பெற்றது.

இதில் அதிக உயர்ந்த விலையைப் பெற்ற எண் ‘‘RM 8′ என்பதாகும். 297,000 ரிங்கிட்டுக்கு இந்த எண் ஒருவரால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பெர்லிஸ் சுல்தானுக்கு ‘1’ஆம் எண்

‘RM 1′ என்ற எண் அரச பரம்பரைக்கு ஒதுக்கப்பட்ட விருப்புரிமையின் கீழ் பெர்லிஸ் ஆட்சியாளர் துவாங்கு சைட் சிராஜூடின் சைட் புத்ரா ஜமாலுலாய் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

‘RM 7′ என்ற எண் பெர்லிஸ் மாநில அரசுக்கு மந்திரி பெசாருக்கு ஒதுக்கப்பட்ட விருப்புரிமையின் கீழ் மாநில அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வரிசை எண்களுக்கு மொத்தம் 6,272 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், தனி நபர்களும், நிறுவனங்களும் இந்த ஏல விண்ணப்பத்தில் பங்கு பெற்றதாகவும், ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், ஏலத் தொகையில் 50 சதவீதம் இணைக்கப்பட்டிருந்ததாகவும் பெர்லிஸ் மாநில சாலைப் போக்குவரத்து இலாகா இயக்குநர் சுல்ஹாஸ்மி முகமட் தெரிவித்திருக்கின்றார்.

வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் மீதமுள்ள 50 சதவீத ஏலத் தொகையை அவர்கள் செலுத்த வேண்டுமென்றும், அடுத்த 6 மாதங்களுக்குள் தங்களுக்குக் கிடைத்த எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அப்படிச் செய்யாவிட்டால், அவர்களின் பதிவு எண் மற்ற ஏலங்களுக்கு திறந்து விடப்படும் என்றும் சாலைப் போக்குவரத்து இலாகா கூறியுள்ளது.

இதுவரையில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட எண்களில் சாதனை புரிந்துள்ளது ‘WWW 1′ என்ற எண்ணாகும். மே மாதம் 2012இல் 520,000 ரிங்கிட்டுக்கு இந்த எண் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில் 300,100 ரிங்கிட்டுக்கு எடுக்கப்பட்ட ‘MCA 1′ என்ற எண்தான் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்ட எண்ணாக இருந்து வந்தது.