கோலாலம்பூர், ஏப்ரல் 7 – நாடாளுமன்றத்தில் இன்று அதிகாலை 2.26 மணியளவில், 79 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, பயங்கரவாதத் தடுப்பு சட்டமான ‘பொடா’ நிறைவேற்றப்பட்டது. இதற்கு 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்கட்சியினரின் கடுமையான எதிர்ப்புகளுடன் சுமார் 10 மணி நேரங்கள் நீடித்த விவாதங்களின் இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளைப் பெற்றார். அவர்கள் இந்த சட்டம் இன்னொரு உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் (ஐஎஸ்ஏ) என்று வர்ணித்தனர்.
எனினும், கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில் திருத்தங்கள் இருந்தால், தேவைப்படும் போது நிறைவேற்றப்படும் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.