Home நாடு ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களை அகற்ற 3 நாட்கள் ஆகும் – போக்குவரத்து அமைச்சு

ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களை அகற்ற 3 நாட்கள் ஆகும் – போக்குவரத்து அமைச்சு

546
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 7 – செமினியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களை விபத்துப் பகுதியிலிருந்து முழுமையாக அகற்ற, தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினருக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Semenyih Helicopter 2

விமான விபத்து குறித்த விசாரணை சுங்கை பெசியில் உள்ள அரச மலேசிய காவல்துறையின் வான் பிரிவில் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் இஸ்மாயில் பக்கர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களை அகற்ற எங்களுக்கு கால அவகாசம் தேவை. ஹெலிகாப்டரின் சில பாகங்கள் பெரிதாக இருப்பதால் அவற்றை விபத்துப் பகுதியிலிருந்து அகற்ற வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது,” என்றார் இஸ்மாயில் பக்கர்.

தனியாருக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்சிஸ், பிரதமரின் மூத்த தனிச்செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்லின் அலியாஸ் உள்ளிட்ட அறுவர் உயிரிழந்தனர்.