Home இந்தியா ஆந்திராவில் செம்மரம் கடத்திய 20 பேர் சுட்டுக் கொலை – வைகோ கடும் கண்டனம்!

ஆந்திராவில் செம்மரம் கடத்திய 20 பேர் சுட்டுக் கொலை – வைகோ கடும் கண்டனம்!

624
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_88864862919ஆந்திரா, ஏப்ரல் 7 – திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டிய கும்பல் மீது ஆந்திர மாநில காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில்;

vaiko_20092011_periyarthalam2“செம்மரங்களை வெட்டிக் கடத்துகின்ற பெரும் திமிங்கலங்களும், பண முதலைகளும் எதிலும் சிக்காமல் தப்பித்துக்கொள்கின்றனர், அன்றாடம் உழைக்கின்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்”.

#TamilSchoolmychoice

“சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும். காடுகளில் உலவும் விலங்குகள், பறவைகளைக் கூட சுட்டுப் பொசுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது”.

“ஆனால், 12 தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினருக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு பணி நீக்கம் செய்வதுடன், கைது செய்யப்பட வேண்டும்”.

andhra2“பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.