Home வாழ் நலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும்!

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும்!

468
0
SHARE
Ad

eggலண்டன், ஏப்ரல் 7 – மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் 2-ஆம் வகை நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் 2-ஆம் வகை நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

egg,முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள்.

#TamilSchoolmychoice

அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு 2-ஆம் வகை நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதன் மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.