Home நாடு செமினி விபத்து: பெண் பயணியும், விமானியும் லீமா 2015-ல் பங்கேற்றுள்ளனர்!

செமினி விபத்து: பெண் பயணியும், விமானியும் லீமா 2015-ல் பங்கேற்றுள்ளனர்!

587
0
SHARE
Ad

செமினி, ஏப்ரல் 7 – கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளில், செமினி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பெண் பயணி, அய்டானா பைசியரா (வயது 25) கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் தான் என்ற முடிவுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர்.

எனினும், மரபணு பரிசோதனைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சிலாங்கூர் காவல்துறை மூத்த துணை ஆணையர் டத்தோ அப்துல் சமா மட் தெரிவித்துள்ளார்.

captainclifford-m-600x360

#TamilSchoolmychoice

(விமானி கிளிஃப் ஃபோர்னியர்)

இந்நிலையில், அப்பெண் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பை அதிகாரிகள் சோதனையிட்டதில், அவர் கடந்த மாதம் நடைபெற்ற லீமா 2015 கண்காட்சியில், விமானி கிளிஃப் ஃபோர்னியருடன் கலந்து கொண்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

“குடியிருப்பில் கண்டறியப்பட்டுள்ள விமான டிக்கெட்டுகளில் லீமாவிற்காக மார்ச் 21-ம் தேதி லங்காவி சென்றிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.  அந்த டிக்கெட்டுகளில் விமானியின் பெயரும், அப்பெண்ணின் பெயரும் உள்ளது” என்று அப்துல் சமா மட் கூறியுள்ளார்.

“இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் விமானி கிளிஃப் ஃபோர்னியருக்கு, அப்பெண் நெருக்கமானவராக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விமானி பல முறை அப்பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார் என்பதை அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.” என்றும் அப்துல் சமா மட் கூறியுள்ளார்.

மேலும், அப்பெண் பைலர் ஆக வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார் என்பதும், விமானியுடன் வேறு விமானங்களிலும் அப்பெண் உடன் பயணம் செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அப்துல் சமா மட் தெரிவித்துள்ளார்.