Home இந்தியா தமிழர்களை சுடாமல் கைது செய்திருக்கலாம்: ஆந்திர முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

தமிழர்களை சுடாமல் கைது செய்திருக்கலாம்: ஆந்திர முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

575
0
SHARE
Ad

bannirசென்னை, ஏப்ரல் 8 – ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் நேற்று காலை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் பலியானோர் தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனால் தமிழக – ஆந்திரா எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், காவல்துறை உயர் அதிகாரி அசோக்குமார், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, அரசு ஆலோசகர்கள் ராமானுஜம், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது; “செவ்வாய்க்கிழமை காலை, ஆந்திர மாநிலம் சேஷசாலா வனப் பகுதியில், செம்மரக் கடத்தல் கும்பல் மீது ஆந்திர மாநில வனத்துறையினர் நடத்திய மிக மோசமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது”.

“இந்த சம்பவத்தில் 20 பேர் துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பலரும் தமிழகத்திக் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது”.

“அவர்கள் சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவர்கள் மீது இப்படி ஒரு மோசமான தாக்குதலை வனத்துறையினர் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் நேர்மையான விசாரணையை நடத்திட வேண்டும்.”

“இதில் எந்த வகையிலாவது மனித உரிமை மீறல் நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வழி செய்ய வேண்டும்” என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.