Home நாடு மகாதீருக்கு பதிலளியுங்கள் – பிரதமருக்கு கைரி மீண்டும் வலியுறுத்தல்

மகாதீருக்கு பதிலளியுங்கள் – பிரதமருக்கு கைரி மீண்டும் வலியுறுத்தல்

480
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 9 – தனக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கும், குறிப்பாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் கேள்விகளுக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

khairy

நீண்ட காலமாக அமைதியாக இருந்துவிட்டார் நஜிப் என்று குறிப்பிட்டுள்ள கைரி, இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக நேற்று தேசிய விளையாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கைரி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், நஜிப் தொடர்ந்து மௌனமாக இருப்பதால், அவரது தலைமைத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த கைரி, எல்லா தலைமைத்துவங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் வருவது இயல்பு தான் என்று தெரிவித்துள்ளார்.