Home இந்தியா ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 45 ஓட்டங்களில் வெற்றி கொண்டது!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 45 ஓட்டங்களில் வெற்றி கொண்டது!

669
0
SHARE
Ad

Chennai Super Kings Logo with Dhoniசென்னை, ஏப்ரல் 11 – இந்த ஆண்டுக்கான பெப்சி ஐபிஎல் 20:20 போட்டிகளின் தொடரில் இன்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி  வெற்றி பெற்றது.

45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி ஹைதராபாத் அணியை வெற்றி கொண்டது. சென்னைக்கு இது இரண்டாவது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் சென்னை வெற்றி கொண்டது.

இன்றைக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

#TamilSchoolmychoice

இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டம் கொல்கத்தா நகரில் நடைபெறுகின்றது.

(மேலும் செய்திகள் தொடரும்)