Home இந்தியா பிரான்சில் இருந்து ஜெர்மனி சென்றார் மோடி!

பிரான்சில் இருந்து ஜெர்மனி சென்றார் மோடி!

488
0
SHARE
Ad

Modi in Germanyபாரிஸ், ஏப்ரல் 13 – பிரான்ஸ் நாட்டிற்கு முதல் முறையாக அரசு முறைப் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இறுதி நாளான நேற்று அந்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் நன்றி கூறி தனது பயணத்தை நிறைவு செய்தார்.

அதன்பின்பு ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். பிரதமரின் இந்த பயணத்தில் பிரான்ஸ் நாட்டுடன் ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவது, ஜெய்தாபூர் அணு உலை திட்டம் உள்ளிட்ட, 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஆதரவு கோரி ஐரோப்பிய நாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்டார் மோடி. முதலாவதாக, பிரான்ஸ் நாட்டிற்கு 4 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை சென்றார்.

#TamilSchoolmychoice

கடந்த 3 நாட்கள் பிரான்சில் தங்கியிருந்த மோடி, அந்நாட்டுடன் வெற்றிகரமாக 17 ஒப்பந்தங்களை முடித்தார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியிடம் இந்தியாவின் வளர்ச்சி, மேம்பாட்டிற்காக 200 கோடி யூரோ டாலர்களை முதலீடு செய்வதாக பிரான்ஸ் அரசு உறுதியளித்தது.

இதனிடையே, டூசல் நகருக்கு  பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள ஏர்பஸ் விமானம் கட்டுமான நிறுவனத்தைப் பார்வையிட்டு அந்நிறுவன அதிபர்களிடம் மோடி பேசினார்.

hannover-germany-prime-minister-narendra-modi-289826இந்த சந்திப்பின் போது, ஏர்பஸ் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தனது முதலீட்டை தற்போதுள்ள, ரூ 2,480 கோடியிலிருந்து, ரூ12,400 கோடியாக அதிகரிக்க பிரதமர் மோடியிடம் உறுதியளித்தது.

அதன் பின்பு, பிரான்ஸ் அதிபர் ஹோலண்ட் மற்றும் பிரதமர் மோடி இடையே இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும், பிரான்ஸ் நாட்டுடன் இந்தியாவின் ராஜதந்திர உறவுகள் நிச்சயமாக புதிய உயரத்திற்கும், அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்லப்படும் என்று பிரத மர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றும் என்று மோடி உறுதியளித்தார்.