Home உலகம் ராவுல் காஸ்ட்ரோ உடனான சந்திப்பு பற்றி ஒபாமா பெருமிதம்!

ராவுல் காஸ்ட்ரோ உடனான சந்திப்பு பற்றி ஒபாமா பெருமிதம்!

487
0
SHARE
Ad

Castroபனாமாசிட்டி, ஏப்ரல் 13 – ராவுல் காஸ்ட்ரோவுடனான சந்திப்பு, அமெரிக்கா-கியூபா உறவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுப் பகைவர்களாக இருந்த அமெரிக்காவும், கியூபாவும் பகைமையை மறந்து, நட்புறவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. அதன் பலனாக, கடந்த சனிக்கிழமை, அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்தார். இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், இது குறித்து ஒபாமா கூறுகையில், “கியூபா, அதிபருடனான சந்திப்பு இரு நாடுகளுடனான உறவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. எனினும், அவை பெரிய சிக்கலை ஏற்படுத்தாது.”

#TamilSchoolmychoice

“கியூபாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நான் தொடர்ந்து வலியுறுத்துவேன். கடந்த கால நிகழ்வுகள் மாறி, புதிய நட்புறவு மலர்வதற்கான வாய்ப்புகள் மேலோங்கி உள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.