Home உலகம் இந்தியாவின் நவீன நகரங்கள் திட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் பிரான்சின் தேல்ஸ் நிறுவனம்!

இந்தியாவின் நவீன நகரங்கள் திட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் பிரான்சின் தேல்ஸ் நிறுவனம்!

552
0
SHARE
Ad

smartcitiesபாரிஸ், ஏப்ரல் 16 – இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களுள் ஒன்றான ‘நவீன நகரங்களை’ (Smart City) உருவாக்கும் திட்டத்தைக் கைப்பற்ற பிரான்ஸின் தேல்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகின்றது. சுமார் 3,300 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தைக் கைப்பற்ற அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முயன்று வரும் நிலையில், அந்த வரிசையில் பிரான்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

இந்தியா-பிரான்ஸ் இடையே ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான வர்த்தகம் சாதகமாக அமைந்த நிலையில், ரபேல் ஜெட் விமானங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான தேல்ஸ் நிறுவனம், இந்திய வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வணிக வளர்ச்சி இயக்குனர் யான் லெவி கூறுகையில், “இந்தியா-பிரான்ஸ் இடையே வெற்றிகரமாக முடிந்த ரபேல் ஜெட் போர் விமானங்கள் ஒப்பந்தம் மூலம், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் தொடர்பாக பல்வேறு சாதகமான அம்சங்கள் உருவாகி உள்ளன.”

#TamilSchoolmychoice

“இந்தியா, பெரிய திட்டங்களை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் தற்போது தீர்ந்துள்ளது. எங்கள் நிறுவனம், நகரங்களை பாதுகாப்பானதாகவும், சிறப்பான நவீன கட்டமைப்புகள் உடையதாகவும் மாற்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது”

“500 முதல் 600 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த திட்டத்தை, இந்தியாவில் செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.