Home நாடு ஏமனில் உள்ள மலேசிய மாணவர்கள் வெளியேற ஹிஷாமுடின் வலியுறுத்து!

ஏமனில் உள்ள மலேசிய மாணவர்கள் வெளியேற ஹிஷாமுடின் வலியுறுத்து!

558
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16 – கடும் மோதல்கள் நிகழ்ந்து வரும் ஏமனில் தங்கியுள்ள 131 மலேசிய மாணவர்கள் நாடு திரும்ப வேண்டும் என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் வலியுறுத்தி உள்ளார்.

hishamuddin

போர் பூமியான ஏமனிலேயே தொடர்ந்து தங்குவது என முடிவு செய்துள்ள அந்த மாணவர்கள் அனைவரும் தங்களது இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“ஏமனில் உள்ள மலேசிய தூதரகத்தில் அந்த 131 மாணவர்களும் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். போராளிகள் மீது சவூதி அரேபியா தலைமையிலான போர் விமானங்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த மூன்று வாரங்களாக நீடிக்கும் தாக்குதல் காரணமாக உணவுத் தட்டுப்பாடு உட்பட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன,” என்று ஹிஷாமுடின் கவலை தெரிவித்தார்.

இதுவரை ஏமனில் இருந்து 382 மலேசிய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததுடன் அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப பாடுபட்ட அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

நாடு திரும்பிய மாணவர்கள் அனைவரும் மலேசியாவிலேயே தங்களது கல்வியைத் தொடரலாம் என்றும், இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.