Home நாடு “நஜிப் தன்னை நிரூபிக்க மகாதீர் வாய்ப்பு அளிக்க வேண்டும்” – சாமிவேலு கருத்து

“நஜிப் தன்னை நிரூபிக்க மகாதீர் வாய்ப்பு அளிக்க வேண்டும்” – சாமிவேலு கருத்து

718
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 16 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நாட்டின் தலைவராக செயல்பட தகுதியானவர் தான் என்று முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு கருத்து தெரிவித்துள்ளார்.

நஜிப் மேலும் தனது பணிகளை சிறப்பாக செய்ய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் சாமிவேலு குறிபிட்டுள்ளார்.

?????????????????????????

#TamilSchoolmychoice

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மகாதீர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் அவர் நஜிப் தன்னை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். காரணம் நஜிப் பல நல்ல திட்டங்களை உருவாக்கியிருக்கின்றார். இந்த நேரத்தில் நாம் அவரை தடுத்தால், மக்கள் தான் துன்பப்படுவார்கள்” என்று சாமிவேலு கூறியுள்ளார்.

இன்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 11 வது மலேசியன் திட்டம் மற்றும் இந்திய சமுதாயம் என்ற கருத்தரங்கில் பேசிய சாமிவேலு இவ்வாறு தெரிவித்துள்ளார்.