Home உலகம் சத்யா நாதெல்லாவிற்கு ‘மாற்றத்திற்கான சாம்பியன்’ விருது வழங்க ஒபாமா முடிவு!

சத்யா நாதெல்லாவிற்கு ‘மாற்றத்திற்கான சாம்பியன்’ விருது வழங்க ஒபாமா முடிவு!

580
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், ஏப்ரல் 17 – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் பணிகளை கௌரவிக்கும் நோக்கத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவருக்கு மாற்றத்திற்கான சாம்பியன்‘ (Champions of Change) என்ற விருதினை அளிக்கத் தீர்மானித்துள்ளார். ஊழியர்களின் நலன் மட்டுமல்லாது அவர்களின் குடும்ப நலனிலும் நாதெல்லா, காட்டிய அக்கறை, ஒபாமாவை வெகுவாக கவர்ந்துள்ளது.

சமீபத்தில் நாதெல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க விநியோகஸ்தர்களிடம் மைக்ரோசாப்ட்டிற்காக பணி புரியும் தொழிலாளர்கள், வருடத்தில் 15 நாட்களுக்கு முழு ஊதியத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.

தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க, நாதெல்லா ஏற்படுத்திய இந்த மற்றம், தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் ஒபாமாவையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாக அவர்மாற்றத்திற்கான சாம்பியன் விருதை நாதெல்லாவிற்கு வழங்க தீர்மானித்துள்ளார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.