Home உலகம் ஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்றியது அல்-காய்தா!

ஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்றியது அல்-காய்தா!

603
0
SHARE
Ad

Yemen_Mitc-1அல் முக்காலா, ஏப்ரல் 17 – ஏமனின் அல் முக்காலா நகரில் உள்ள மிகப் பெரிய விமான நிலையத்தை அல்-காய்தா இயக்கம் கைப்பறியது. இதைத் தவிர எண்ணெய் நிலையம் மற்றும் துறைமுகம் ஒன்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

ஏமனில் போர் நடந்து வரும் நிலையில், ஏற்கெனவே இந்த இயக்கம் சிறையை தகர்த்து முக்கிய தீவிரவாத தலைவர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை தப்பிக்கச் செய்தனர். அதுமட்டுமல்லாமல் தெற்கு ஏமனின் மையப் பகுதியான ரியான் விமான நிலையமான நிலையத்தை தங்களது வசம் கொண்டு வந்தனர்.

Yemen-Reopens-Airports-After-Closure-Due-To-Strike-Ministerஇதற்கிடையே ஏமனில் தொடர்ந்து முன்னேறி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதிஅரேபியா உள்ளிட்ட வளைகுடா கூட்டமைப்பு நாடுகளின் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழித் தாக்குதல் பலனளிக்காத நிலையில் தற்போது தரைப் படையை களத்தில் இறக்க சவுதி அரேபியா ஆயத்தமாகி வருகிறது.

#TamilSchoolmychoice

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதன் தலைவரை உயிரோடு அல்லது பிணமாக கொண்டு வருபவருக்கு 20 கிலோ தங்கம் வழங்கப்படும் என்று அரேபிய தீபகற்ப அல்-காய்தா ஏற்கெனவே அறிவித்திருந்தது.

yemen-02.ss_fullஹவுத்தி கிளர்ச்சிப்படை கடந்த 2014-ஆம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவை தனது கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்தது. அங்கு மற்ற பகுதிகளையும் தங்களது கையில் கொண்டுவர முயற்சிக்கும் அந்த இயக்கத்துக்கு இரான் உதவி வருகிறது. இவர்களுக்கு எதிராகவும் அதிபர் ஹதிக்கு ஆதரவாகவும் வளைகுடா நாடுகள் போர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.