Home வாழ் நலம் உடலுக்கும் குளிர்ச்சியை தந்து மூல நோயை குணப்படுத்தும் பீட்ரூட்!

உடலுக்கும் குளிர்ச்சியை தந்து மூல நோயை குணப்படுத்தும் பீட்ரூட்!

874
0
SHARE
Ad

beetroot1ஏப்ரல் 17 – பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட், 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை தரும்.

ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகளைத் தீரும். புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட்டை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே குணமாகும்.

ரத்த சோகை, உடல் எடை சரியாகும். முகப்பொலிவு கூடும் சிறுநீரக எரிச்சலை குறைக்கிறது. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாற்றைத் தடவினால் தீப்புண் கொப்பளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும்.

#TamilSchoolmychoice

பீட்ரூட் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வந்தால் ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும். மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.

sl1539தினமும் பீட்ரூட் சாறு குடித்து வந்தால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம். பீட்ரூட்டைக் கசாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7 சதவீதம் நீச்சத்தும், 1.7 புரதச்சத்தும், 0.1 சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளன. சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துக்களும் உள்ளன.

வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்டுகள் உடலுக்குள் சென்றதும், நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்பட்டு, ரத்த குழாய்களை சரிசெய்து, ரத்த அழுத்தம் குறைகிறது.