Home உலகம் மலேசியாவில் பேச்சு,அரசியல் சுதந்திரத்திற்கு தடை போடக்கூடாது – அமெரிக்கா

மலேசியாவில் பேச்சு,அரசியல் சுதந்திரத்திற்கு தடை போடக்கூடாது – அமெரிக்கா

567
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 18 – திருத்தப்பட்ட தேச நிந்தனைச் சட்டம் அரசியல் சுதந்திரத்திற்கும் பேச்சு சுதந்திரத்திற்கும் தடை போடுவதாக இருக்கக் கூடாது என மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் ஜோசப் யுன் தெரிவித்துள்ளார்.

130607_schina_sea_keynote_hpslide_jyun1

பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அடிப்படை சுதந்திரம், அரசியல் ரீதியில் எதிர்தரப்பின் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் திருத்தப்பட்ட தேச நிந்தனைச் சட்டம் அமல்படுத்தப்படும் என நம்புகிறோம். இது தொடர்பாக மேலும் பல பணிகள் உள்ளன.அவை அனைத்தும் இந்தச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்துள்ளது” என்றார் ஜோசப் யுன்.

அரசுக்கெதிரான விமர்சனங்களை அனுமதிப்பது போன்ற பல்வேறு முன்னேற்றங்கள் திருத்தப்பட்ட சட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மலேசியாவில் மேலும் கருத்து சுதந்திரம் வேண்டும் என்று விரும்பும் அமெரிக்காவுடன் அனைத்துலக சமூகமும் இணைந்திருப்பதாக தெரிவித்தார்.

“முதல் முறையாக குற்றம்சாட்டப்படுபவர்கள், சமூக ஊடகங்களில் தேச நிந்தனைக்குரிய விஷயங்களை பகிர்ந்துகொள்பவர்களுக்கு அதிகளவு தண்டனை வழங்கும் மாற்றம் கவலை தருகிறது,” என்றார் ஜோசப் யுன்.