Home கலை உலகம் சினிமாவிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ஷாருக்கானுக்கு ஆசிய விருது!

சினிமாவிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ஷாருக்கானுக்கு ஆசிய விருது!

684
0
SHARE
Ad

srk-asian-awards-trophyலண்டன், ஏப்ரல் 19 – பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ஷாருக்கானிற்கு சினிமாவிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ஆசிய விருது வழங்கப்பட்டது.

‘ஆசிய விருதுகள்’ (Asian Awards) ஒவ்வொரு ஆண்டும் வர்த்தகம், பொழுதுபோக்கு, சேவை, கலாச்சாரம் உள்ளிட்ட 14 பிரிவுகளில் சிறந்து விளங்கும் ஆசியர்களுக்கு வழங்கப்படும்.

2015-ம் ஆண்டிற்கான ஆசிய விருது நிகழ்ச்சி நேற்று முன்தினம், லண்டன் கிராஸ்வெனார் ஹவுஸில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஷாருக்கானிற்கு, சினிமாவிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

விருது பெற்ற பின் ஷாருக்கான் கூறியதாவது:-

“இந்த விருதைப் பெறுவதில் நான் பெருமை கொள்கிறேன். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆசியர்களுடன் இந்த விருதைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது.”

“ஆசிய அளவில் நிறைய திறமைசாலிகள் உள்ளனர். அவர்களுக்கு இந்த விருது பெரும் ஊக்கத்தை அளிக்கும். என்னுடன் சேர்ந்து ஆசிய விருதுகளைப் பெரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.