Home கலை உலகம் 190 கோடியில் தயாராகவிருக்கிறது ரஜினி – ஷங்கரின் அடுத்தப் படம்!

190 கோடியில் தயாராகவிருக்கிறது ரஜினி – ஷங்கரின் அடுத்தப் படம்!

599
0
SHARE
Ad

rajini-shankarசென்னை, ஏப்ரல் 22 – ரஜினியின் அடுத்தப் படம் என்ன? இயக்குநர் ஷங்கரின் அடுத்தப் படத்தின் கதாநாயகர் யாரு? இதுவே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. தற்போது, எந்திரன் படத்திற்குப் பிறகு ரஜினியை மீண்டும் இயக்கவிருக்கிறார் ஷங்கர்.

‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உடனடியாக வெற்றி படம் கொடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ரஜினி. சமீபத்தில் வெளியான ஷங்கரின் ‘ஐ’ படத்திற்குப் பிறகு,  அடுத்தப் படத்திற்கான பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன.

இறுதியில் ரஜினி வைத்து படம் இயக்குகிறார் ஷங்கர்.  இப்படம் எந்திரன் பாகம் இரண்டா? இல்லை வேறு கதையா என்பது தெரியவில்லை.

#TamilSchoolmychoice

மேலும் ‘கத்தி’ பட புகழ் “லைக்கா” நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. ‘ஐ’ படத்தின் போதே விஜய் – விக்ரம் இருவரையும் மனதில் வைத்து கதை ஒன்றை எழுதினார் ஷங்கர்.

பின்னர் ரஜினி கேட்டதன் பெயரில் ரஜினிக்காக கதையை மாற்றியிருக்கிறார்.  வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். கதாநாயகனுக்கு இணையான கதாப்பாத்திரம் என்பதால் விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று பேசி வருகின்றனர் படக்குழு.

வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் விக்ரம் சென்னை திரும்பியதும் இதற்கான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் ரஜினி நடிப்பதால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியிருக்கிறது. படப்பிடிப்புக்கு மட்டும் 190 கோடி செலவழிக்கின்றனராம்.