Home உலகம் உலகிலேயே அதிவேகமான புல்லட் ரயிலை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது!

உலகிலேயே அதிவேகமான புல்லட் ரயிலை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது!

492
0
SHARE
Ad

Bullet_trainடோக்கியோ, ஏப்ரல் 22 – ஜப்பானில் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய நவீன புல்லட் ரெயில்கள் மிக வெற்றிகரமாக பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்  ரெயில் பாதையில் காந்த சக்தியால் ஒன்றிணைந்து செல்லக்கூடிய வகையில்  அதிவேக  புல்லட் ரெயில்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

‘மாக்லேவ் புல்லட் ரெயில்’ என அழைக்கப்படும் இவ்வகை ரெயில்களை 280 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டோக்கியோ–நகோயா நகரங்களுக்கு இடையே வரும் 2027ம் ஆண்டில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த புதிய புல்லட் ரெயில்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது 2 நகரங்களுக்கு இடையே உள்ள 280 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 40 நிமிடத்தில் சென்றடைந்து விடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

7 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலின்  சோதனை ஓட்டம் பியூஜி மலைப்பகுதியில்  இன்று நடைபெற்றது. அதில், ஒரு மணி நேரத்தில், 600 கி.மீ. தூரத்தை கடந்து ஓடியது.

இதன்மூலம், கடந்த வாரம் இதே ரெயில் நிகழ்த்திய மணிக்கு 590 கி.மீ. என்ற சாதனை முறியடிக்கப்பட்டு, புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.