துபாய், ஏப்ரல் 22 – ஏமனில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்த சவுதி அரேபிய அரசு தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக தொலைக்காட்சியில் அறிவித்தது.
உள்நாட்டு போர் காரணமாக, கடந்த மார்ச் 19-முதல் அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா ரணுவம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வந்தது.
இதுவரை நடைபெற்று வந்த ‘தீர்வுக்கான புயல்’ என்ற தாக்குதல் நடவடிக்கைகள் முடிவு பெறுவதாகவும், தற்போது ‘நம்பிக்கையை மீட்டெடுப்பது’ என்ற புதிய நடவடிக்கை தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏமன் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.