Home நாடு தேவாலய விவகாரம்: ஐஜிபி சகோதரருக்கு காவல்துறை சம்மன்!

தேவாலய விவகாரம்: ஐஜிபி சகோதரருக்கு காவல்துறை சம்மன்!

495
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – தாமான் மேடானில் தேவாலயத்தின் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் தேசிய காவல்படைத்  தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பக்கருக்கு (படம்) காவல்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Abdullah Abu Bakar Taman Medan

இது குறித்து அப்துல்லா மலாய் மெயில் பத்திரிக்கைக்கு அளித்துள்ள தகவலில், “இன்று காலை 11 மணியளவில், காவல்துறை என்னை போனில் அழைத்து, தேவாலய ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் தேவாலயம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் என்னை காவல்நிலையம் வரும் படி கூறியுள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இன்று தனது தொழில் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையகத்திற்கு தான் செல்லவுள்ளதாகவும் அப்துல்லா தகவல் அளித்துள்ளார்.

“இந்த பிரச்சனை பெரிதாவதற்குக் காரணம் நான் ஐஜிபி-ன் சகோதரர் என்பதால் தான். அவர்கள் டான்ஸ்ரீ-ன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். பரவாயில்லை. நான் இதை மிகவும் அமைதியாகவே எடுத்துக் கொள்கிறேன். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை வகிக்கவில்லை. அதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவை தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்தனர்.

இந்த அர்ப்பாட்டத்திற்கு அப்துல்லா தலைமை வகித்தார் என்று கூறப்படுவதை அவர் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றார்.

தான் இருதரப்பினருக்கும் இடையில் நடுநிலைமையாக செயல்பட்டு இன மோதல் ஏற்படாமல் தடுத்ததாக கூறிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.