Home இந்தியா ஐபிஎல்: ஹைதராபாத் அணி கொல்கத்தாவை தோற்கடித்தது

ஐபிஎல்: ஹைதராபாத் அணி கொல்கத்தாவை தோற்கடித்தது

583
0
SHARE
Ad

Hyderabad Sunrisers logoவிசாகப்பட்டினம், ஏப்ரல் 23 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாடின. இரண்டு ஆட்டங்களுமே மழையால் தடைப்பட்டு பின்னர் தொடங்கின.

முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி கொல்கத்தாவை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

#TamilSchoolmychoice

முதல் பாதி ஆட்டத்தில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176ஓட்டங்கள் எடுத்து ஹைதராபாத் நிறைவு செய்தது.

ஆனால் மழையின் காரணமாக, இரண்டாவது பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணி, 12 ஓவர்களில் 118 ஓட்டங்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த 12 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் காரணமாக, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணியை வெற்றி கொண்டது.

Kolkata-Knight-Riders-Logo