Home பொது ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மலேசியப் படையினரின் தாக்குதல் தொடர்கிறது – பிரதமர் நஜிப்

ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மலேசியப் படையினரின் தாக்குதல் தொடர்கிறது – பிரதமர் நஜிப்

590
0
SHARE
Ad

6கோலாலம்பூர், மார்ச் 5 –  லகாட் டத்துவில் உள்ள கம்போங் தண்டு என்ற இடத்தில் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மலேசியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக பிரதமர் நஜிப் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த ஒரு இழுக்கும் ஏற்படாமல் இப்பிரச்சனைக்கு விரைவில் சுமூகத் தீர்வு காண முயலும் என்றார்.

“மலேசியா ஒரு அமைதி விரும்பும் இஸ்லாம் நாடு. இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் சரியான தீர்வு கண்டோமேயானால் மேலும் பல உயிரழப்புகள் நிகழாமல் தடுக்கலாம்” என்று பிரதமர் நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஊடுருவல்கார்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவர்களை  அமைதியாக சண்டையிலிருந்து பின்வாங்க முயன்று வருவதாக  தெரிவித்தார்.

மேலும் அவர், “தொடர்ந்து நீடித்து வரும் இந்த ஊடுருவல் பிரச்சனையை வைத்து பார்க்கும் போது அவர்கள் சபாவை விட்டு விலகுவதாக இல்லை என்பது தகுந்த சாட்சியங்களுடன் தெரிகிறது” என்றார்.