வெலிங்டன், ஏப்ரல் 25 – நியூசிலாந்தில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.3-ஆக பதிவானது. நாடு முழுவதும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.
அந்நாட்டின் தெற்கு தீவு நகரமான கைகவுராவிலிருந்து 66 கி.மீ. தொலைவில், கடலுக்கடியில் 55 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்நிலையில் அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. கடலுக்கடியில் 55 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சேதாரம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
எனவே பாதுகாப்பு கருதி ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிக்டனிலிருந்து கிரைஸ்ட்சர்ச் செல்லும் ரயில்பாதை மற்றும் கிரைஸ்ட்சர்ச்சிலிருந்து ஆர்தர்ஸ் பாஸ் செல்லும் ரயில் பாதையில் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என ஆராயப்பட்டு வருகிறது.