Home இந்தியா திருநங்கைகளுக்கும் சம உரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

திருநங்கைகளுக்கும் சம உரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

651
0
SHARE
Ad

IndiaInk-jumboபுதுடெல்லி, ஏப்ரல் 25 – திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது. தனி நபர் மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியது 46 வருடங்களிலேயே இதுதான் முதல் முறையாகும்.

ஆண் மற்றும் பெண்களைப்போலவே, திருநங்கைகளுக்கும், சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்பது போன்ற அம்சங்களை கொண்ட சட்ட மசோதாவை திருச்சி சிவா கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த தனி நபர் மசோதா மீதான விவாதம் முடிந்து இன்று நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ‘திருநங்கைகள் உரிமை சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்த சட்டம் இனிமேல் நாடாளுமன்ற அவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

#TamilSchoolmychoice

அங்கும் மசோதா நிறைவேறினால், குடியரசு தலைவர் ஒப்புதலுடன் இச்சட்டம் அமலுக்கு வரும். நாடாளுமன்ற வரலாற்றிலேயே 46 வருடங்களுக்கு பிறகு தனி நபர் (அரசு சார்பில் அல்லாத) மசோதா ஒன்று நிறைவேறியுள்ளது இதுதான் முதல் முறை.

இந்த பெருமையை தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சிவா பெற்றுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா கூறியதாவ்து;

“சமூகத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக திருநங்கைகள் கூறிவரும் நிலையில்தான், இந்த மசோதாவை தாக்கல் செய்யும் முடிவுக்கு வந்தேன். இந்த சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.