Home இந்தியா ஐபிஎல்: மும்பாய் இந்தியன்ஸ் 20 ஓட்டங்களில் ஹைதராபாத் அணியை வெற்றி கொண்டது

ஐபிஎல்: மும்பாய் இந்தியன்ஸ் 20 ஓட்டங்களில் ஹைதராபாத் அணியை வெற்றி கொண்டது

665
0
SHARE
Ad

Mumbai Indians Logoமும்பாய், ஏப்ரல் 25 – பெப்சி ஐபிஎல் தொடரில் இன்று 23வது ஆட்டமாக, மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஆட்டம் நடைபெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில்  மும்பாய் அணி 20 ஓவர்கள் முடிவடைந்த போது 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதியில் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களை முடித்தபோது 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மும்பாய் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

Hyderabad Sunrisers logo

இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் அணியை சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில் சந்திக்கின்றது.