Home இந்தியா ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 97 ஓட்டங்களில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 97 ஓட்டங்களில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது!

830
0
SHARE
Ad

Chennai Super Kings Logo with Dhoniசென்னை, ஏப்ரல் 26 – நேற்று இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் அணியும் களமிறங்கின.

முதலில் பந்து வீச்சை எதிர்கொண்ட சென்னை அணி, டோனி தலைமையில், 20 ஓவர்களில் 3 ஓவர்களை மட்டுமே இழந்து, 192 ஓட்டங்களைக் குவித்தது. சென்னை அணி அபாரமாக விளையாடியதோடு, முதல் இரண்டு ஆட்டக்காரர்களாக சென்னை அணி சார்பில் களமிறங்கிய, மேக் கெல்லம் மற்றும் டிவெய்ன் ஸ்மித் இருவரும் முதல் சில பந்துகளிலேயே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர்.

இரண்டாவது பாதியில் சென்னை அணி பந்து வீசியது. 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பஞ்சாப் அணி விளையாடத் தொடங்கியது.

#TamilSchoolmychoice

இருப்பினும் 20 ஓவர்கள் முடிந்தபோது பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

 

vKings-XI-Punjab

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மலேசிய நேரப்படி மாலை 6.30 மணியளவில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் சந்திக்கின்றன.

மலேசிய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்குத் தொடங்கும் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.