Home இந்தியா புதிய நிலநடுக்கம் – வட இந்தியா, டில்லியை உலுக்கியது

புதிய நிலநடுக்கம் – வட இந்தியா, டில்லியை உலுக்கியது

640
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngபுதுடில்லி, ஏப்ரல் 26 – நேபாளத்தை நேற்று சிதைத்த நிலநடுக்கத்தின் தாக்கம் முடிவதற்கு முன்னரே, ஒரே நாளில், இன்று மீண்டும் புதிய நிலநடுக்கங்கள் வட இந்திய மாநிலங்களையும், டில்லியையும் உலுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி, லக்னோ நகர்களையும் இன்றைய புதிய நிலநடுக்கம் பாதித்துள்ளதாகவும், ரிக்டர் அளவில் 6.7 புள்ளி அளவினைக் கொண்ட நிலநடுக்கம் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவிலிருந்து கிழக்கு திசையில் 80 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலநடுக்கத்தில் மட்டும் இந்தியாவில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)