Home உலகம் நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலையேறிகள் மரண எண்ணிக்கை 17 ஆக உயர்வு – 61 பேர் காயம்!

நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலையேறிகள் மரண எண்ணிக்கை 17 ஆக உயர்வு – 61 பேர் காயம்!

605
0
SHARE
Ad

Mount Everestகாட்மாண்டு, ஏப்ரல் 26 – நேற்று நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம், உலகின் உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்ட் மலைப் பகுதியையும் தாக்கி, அங்கு மலை முகடுகளில் பனிப்பாறைச் சிதறல்களை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, எவரெஸ்ட் மலையடிவாரத்தில் கூடாரம் அமைத்து மலையேறிகள் முகாமிட்டிருந்த பகுதியும் பாதிப்புக்குள்ளாகி புதையுண்டது.

இந்த நிலநடுக்கப் பாதிப்பால் இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் மலையேறிகள் என நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், எவரெஸ்ட் நிலநடுக்கத்தால் இதுவரை 61 பேர் வரை காயமடைந்துள்ளனர்.