Home அவசியம் படிக்க வேண்டியவை பாலி 9 மரண தண்டனை: “இது போதைக்கு எதிரான போர்” – இந்தோனேசியா கூறுகின்றது!

பாலி 9 மரண தண்டனை: “இது போதைக்கு எதிரான போர்” – இந்தோனேசியா கூறுகின்றது!

586
0
SHARE
Ad

சிலகாப், ஏப்ரல் 29 – போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், ஒரு இந்தோனேசியர் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்தோனேசிய சட்டத்துறை தலைவர், தங்கள் நாடு தற்போது போதைக்கு எதிராக போர் புரிந்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

mayuran2

நூசா கம்பாங்கன் தீவின் சிலாகாப் துறைமுகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்தோனேசிய சட்டத்துறை தலைவர் முகமட் ப்ராசெட்யோ,”மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த போதைக் குற்றங்களிலிருந்து எங்கள் நாடு மீண்டு வர நாங்கள் போதைக்கு எதிராக போர் தொடுத்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “இந்த மரண தண்டனை ஒரு இனிமையான விசயம் கிடையாது. அதே நேரத்தில் இது ஒரு விளையாட்டு வேலையும் கிடையாது. அதனால் நாங்கள் எங்கள் நாட்டை போதையில் இருந்து மீட்க அதை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். வெளிநாட்டுக் குற்றவாளிகளை கொல்வதன் மூலம் அவர்களின் நாடுகளைப் பகைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் போதை தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றோம் ” என்றும் முகமட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரண தண்டனையின் எதிரொலியாக ஆஸ்திரேலியா தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்துள்ள அவர், “அது தற்காலிகமான ஒரு எதிர்வினை” என்று தெரிவித்துள்ளார்.