Home இந்தியா ஐ.பி.எல்-8: பெங்களூரு–ராஜஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

ஐ.பி.எல்-8: பெங்களூரு–ராஜஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

507
0
SHARE
Ad

rr-vs-rcbபெங்களூரு, ஏப்ரல் 30 – ஐ.பி.எல்-8 கிரிக்கெட்டில் பெங்களூரு–ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் முதல் பாதியிலேயே ரத்தானது. 8 அணிகள் இடையிலான 8–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய தகுதிச் (‘பிளே–ஆப்’) சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு நடந்த 29–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு அணியில் இக்பால் அப்துல்லாவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலும், ராஜஸ்தான் அணியில் கிறிஸ் மோரிசுக்கு பதிலாக டிம் சவுதியும் சேர்க்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் வாட்சன் பந்துவீச்சை தேர்வுசெய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. ராஜஸ்தானுக்கு எதிராக ஒரு அணி 200 ரன்களை தொடுவது 2010–ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

பின்னர் ராஜஸ்தான் அணி விளையாட தொடங்குவதற்கு முன்பு பலத்த மழை பெய்தது. நள்ளிரவு வரை விடாது மழை பெய்ததால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டன.

இந்த தொடரில் மழையால் கைவிடப்பட்ட 2–வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே கொல்கத்தா–ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டமும் இதே போல் மழை காரணமாக ரத்தாகியிருந்தது.