Home கலை உலகம் இந்தியாவில் மிகவும் விரும்பப்படுவோர் பட்டியலில் விராட் கோலி முதலிடம்!

இந்தியாவில் மிகவும் விரும்பப்படுவோர் பட்டியலில் விராட் கோலி முதலிடம்!

609
0
SHARE
Ad

Virat-Kohli-Recommended-for-Arjuna-Awardபுதுடெல்லி, ஏப்ரல் 30 – இந்தியாவில் மிகவும் விரும்பப்படுவோர் பட்டியலில்  கிரிக்கெட் வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் விராட் கோலிக்கு பிறகே இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா டைம்ஸ் இணையதளம் இந்தியாவில் மிகவும் விரும்பப்படுவோர் யார்? என இணையத்தளம் மூலம் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் இந்திய அணியின் துணைக் கேப்டன் விராட் கோலி, 20 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தார்.

மைதானத்தில் ஆவேசமாக செயல்படுவது, கிரிக்கெட் திறமை, நேர்மையான நடத்தை ஆகியவற்றால் இந்தியாவில் அதிக மக்கள் நேசிக்கும் மனிதராக விராட் கோலியை உயர்த்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து விராட் கோலி கூறுகையில்;- “உண்மையை மறைத்து நான் பேசுவதில்லை. என்னால் முடிந்தவரை நேர்மையான வாழ்க்கையை நான் வாழ்கிறேன்” என்றார்.

உங்கள் காதலியான அனுஷ்கா சர்மாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? என்று கேட்ட போது,”அனுஷ்காவும் என்னைப் போல நேர்மையானவர். அதோடு மிகவும் எளிமையானவர். அந்த குணமே எனக்கு அவரிடம் பிடித்தது” என்று பதிலளித்தார்.

அதிகம் விரும்பப்படும் என்ற கேள்வியுடன் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளபோதிலும், கோலியின் நேர்மைக்காகவே அவரை விரும்புவதாக அதிகம்பேர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் அதிகம் விரும்பப்படும் நபர் என்ற அடிப்படையில் இரண்டாவது இடத்தை பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் பிடித்துள்ளார். 15-வது இடத்தை நடிகர் சூர்யாவும், 16-வது இடத்தை நடிகர் தனுஷும், 48-வது இடத்தை நடிகர் அஜித்தும் பிடித்துள்ளனர்.