Home நாடு சோங் வெய்க்கு நான் மாத்திரைகளை வழங்கவில்லை – முன்னாள் மசீச தலைவரின் மனைவி

சோங் வெய்க்கு நான் மாத்திரைகளை வழங்கவில்லை – முன்னாள் மசீச தலைவரின் மனைவி

600
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 30 – உலகப் புகழ்பெற்ற மலேசியாவின் தேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய்க்கு தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பரிசாக அளித்த அந்த முக்கியப் பிரமுகரின் மனைவி யார்? – தற்போது இந்த கேள்வி தான் மலேசிய அரசியல் வட்டாரங்களிலும், விளையாட்டுத்துறையிலும் பரபரப்பாக எழுப்பப்பட்டு வருகின்றது.

lee chong wei

நேற்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோரில் பெயர் இந்த விவகாரத்தை இழுக்கப்பட்டது. உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்த லீ சோங் வெய், முன்னாள் மசீச தலைவர் ஒருவரின் மனைவி என்று குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், லீ சோங் வெய்க்கு நன்கு அறிமுகமானவரான முன்னாள் மசீச தலைவர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் லிங் லியாங் சிக்கின் மனைவி ஆங் இ னா மீது தற்போது சந்தேகம் வழுத்துள்ளது.

எனினும், ஆங் இதனை உடனடியாக மறுத்து சீன செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

லீ சோங் வெய் தனக்கு நன்கு அறிமுகமானவர் என்பதை ஒப்புக் கொண்ட ஆங், தான் அவருக்கு கார்டிசெப்ஸ் என்ற ஊக்கமருந்து மாத்திரைகளை வழங்கவில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

தனக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் தான் அந்த பெண்மணி மாத்திரைகளை பரிசளித்ததாகக் கூறி வரும் லீ சோங் வெய், தான் அப்பெண்ணின் பெயரை வெளியிட்டால் அவருக்கு மோசமான விளைவுகள் நேரும் என்பதால் அவரைப் பற்றிய தகவல்களை கூற மறுத்து வருகின்றார்.

முதலில் டெக்சாமிதேசோன் என்ற பொருள் அடங்கிய ஊக்க மருந்தை லீ சோங் வெய் உட்கொண்டதாக கூறப்பட்டது. தற்போதைய விசாரணையில் கார்டிசெப்ஸ் (cordyseps) என்ற ஊக்க மாத்திரைகளை பல வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார் என அனைத்துலக பூப்பந்து சம்மேளனம் அவருக்கு 8 மாத தடை விதித்துள்ளது.