Home நாடு கைது நடவடிக்கை குறித்து டுவிட்டரில் கருத்து – காலிட் கடும் எச்சரிக்கை

கைது நடவடிக்கை குறித்து டுவிட்டரில் கருத்து – காலிட் கடும் எச்சரிக்கை

491
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 2 – ஜிஎஸ்டி பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளருக்கு தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

khalid1

“காவல்துறை அமைதியை நிலைநாட்ட தன் கடமையை செய்கிறது. அதன் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.” என்று காலிட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, ஜெய்ஜெய் டெனிஸ் என்பவர் தனது டுவிட்டரில், “மலேசிய மக்களை அச்சுறுத்த காவல்துறை மேற்கொள்ளும் மிகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கைகள் இது” என்று தெரிவித்திருந்தார்.

காலிட் எச்சரிக்கைக்கு பின்னர், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவின் ஆய்வு உதவியாளரான டெனிஸ் அமைதி காத்து வருவதாகக் கூறப்படுகின்றது.