தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை ஆதாரங்களுடன் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைமை, நேற்று முன்தினம் ஊழலுக்கு எதிராக பேரணியும் நடத்தியது. அந்த பேரணியில் பேசிய குஷ்பு, ஜெயலலிதா பற்றியும், தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பற்றியும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
“ஜெயலலிதா என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார். அவர் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக சிறை தண்டனை பெற்றுள்ளார். தமிழக அரசில், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் தான். ஜெயலலிதா மக்கள் முதல்வர் என்றால், ஓ.பன்னீர்செல்வம் யார். அவர் என்ன ஜெயலலிதாவின் பினாமி முதல்வரா? தான் தமிழக முதல்வர் என்று கூறிக்கொள்ள பன்னீர்செல்வத்திற்கு தைரியம் இருக்கிறதா?” என்று அவர் கூறியுள்ளார்.