Home உலகம் பிரிட்டனின் புதிய இளவரசி! படக் காட்சிகள்!

பிரிட்டனின் புதிய இளவரசி! படக் காட்சிகள்!

909
0
SHARE
Ad

இலண்டன், மே 4 – பெண் குழந்தை பிறந்தால் ‘எனக்கு இளவரசி பிறந்திருக்கின்றாள்’ என்று மகிழ்வோடு கூறுவது நமக்கு வழக்கம்.

ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உண்மையிலேயே பிரிட்டனின் அரச பரம்பரையில் முதன் முறையாக உண்மையிலேயே ஓர் இளவரசி பிறந்து – அரச குடும்பத்தையும், பிரிட்டிஷ் மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறாள்.

பிரிட்டிஷ் அரச பரம்பரையின் புதிய வருகையான அந்த இளவரசியின் படக் காட்சிகள் இங்கே:-

#TamilSchoolmychoice

Catherine, Duchess of Cambridge holds her newborn daughter outside the Lindo Wing at St. Mary's Hospital in Paddington, west London, Britain, 02 May 2015. The baby girl is the royal couple?s second child and fourth in line to the British throne.

தாயாரின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த புதிய இளவரசி. இவருக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்பதற்கான ஆரூடங்கள் இப்போதே தொடங்கி விட்டன.

Britain's Prince William, Duke of Cambridge, and his wife Catherine, Duchess of Cambridge pose with their newborn daughter outside the Lindo Wing at St. Mary's Hospital in Paddington, west London, Britain, 02 May 2015. The baby girl is the royal couple?s second child and fourth in line to the British throne.

இலண்டனில் உள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையின் லிண்டோ பிரிவில் தங்களின் இரண்டாவது குழந்தையோடு பத்திரிக்கையாளர்களுக்கு காட்சி தரும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன்.

Britain's Prince William, Duke of Cambridge, and his wife Catherine, Duchess of Cambridge pose with their newborn daughter on the steps of the Lindo Wing at St. Mary's Hospital in Paddington, west London, Britain, 02 May 2015. The baby girl is the royal couple?s second child and fourth in line to the British throne.

மருத்துவமனையின் முன்பாக தங்களின் குழந்தையோடு காட்சி தரும் பிரின்ஸ் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டனும்.

அரச குடும்பத்தின் வாரிசுகள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கும் குழந்தை இது.

Britain's Prince William, Duke of Cambridge, arrives with his son Prince George at the Lindo Wing to visit his wife and newborn daughter at St. Mary's Hospital in Paddington, west London, Britain, 02 May 2015. Catherine, The Duchess of Cambridge, gave birth to her and Prince William's second child.

புதிய இளவரசி பிறந்த கொஞ்ச நேரத்தில் தனது இளைய சகோதரியைக் காண தந்தையோடு மருத்துவமனைக்கு வருகை தந்தார் கேட் மிடில்டனின் முதல் மகன் இளவரசர் ஜியோர்ஜ்.

 Catherine, Duchess of Cambridge holds her newborn daughter outside the Lindo Wing at St. Mary's Hospital in Paddington, west London, Britain, 02 May 2015. The baby girl is the royal couple?s second child and fourth in line to the British throne.

இரண்டாவது முறையாக தாயான பெருமிதம் – மகிழ்ச்சியில் புதிய இளவரசியை ஏந்தியிருக்கும் இளவரசி கேட் மிடில்டன்.

புதிய இளவரசி பிறந்தது இலண்டனில்  2 மே 2015 சனிக்கிழமை சரியாக காலை மணி 8.34 மணிக்கு!

படங்கள்: EPA