Home இந்தியா மத்திய பிரதேசத்தில் பேருந்து விபத்து – 50 பேர் பலி!

மத்திய பிரதேசத்தில் பேருந்து விபத்து – 50 பேர் பலி!

683
0
SHARE
Ad

bus accident pannaபன்னா, மே 4 – மத்திய பிரதேசத்தின், பன்னா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளானதில், 50 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போபாலில் இருந்து சுமார் 550 கி.மீ தொலைவில் இருக்கும் பன்னா மாவட்டத்தில், பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சட்டார்பூர் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டது.

சட்டார்பூர் அருகே, பாண்டவா நீர்வீழ்ச்சியை கடந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. கவிழ்ந்த வேகத்தில் பேருந்து உடனடியாக தீப்பற்றி எரிந்ததால் பயணிகளால் பேருந்தை விட்டு வெளியேற முடியவில்லை.

#TamilSchoolmychoice

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 50 பேர் உடல் கருகி பலியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. 18-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.