Home இந்தியா ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் 14 ஓட்டங்களில் டெல்லி அணியை வீழ்த்தியது

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் 14 ஓட்டங்களில் டெல்லி அணியை வீழ்த்தியது

659
0
SHARE
Ad

Rajasthan-Royals-Logoமும்பாய், மே 4 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியைத் தோற்கடித்து வாகை சூடியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முதல் பாதி ஆட்டத்தில் டெல்லி அணி பந்து வீச, பந்துகளை அடிக்கத் தொடங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவடைந்தபோது, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 189  ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், 20 ஓவர்கள் முடிவடைந்தபோது டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Delhi Daredevils logo

இன்றைய ஆட்டங்கள்

இன்று நடைபெறும் இரண்டு ஆட்டங்களில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னையில் மோதுகின்றன.

இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் கொல்கத்தாவில் களமிறங்குகின்றன.