Home கலை உலகம் ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் அரசியல் பேசப்போகும் ரஜினி!

‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் அரசியல் பேசப்போகும் ரஜினி!

637
0
SHARE
Ad

ranjithசென்னை, மே 4 – சங்கரின் இயக்கத்தில் எந்திரனின் இரண்டாம் பாகம் தான் ரஜினியின் அடுத்த படம். இல்லைவே இல்லை, ரஜினியுடன் அடுத்து இணையப் போவது ‘முனி’ ராகவா லாரன்ஸ் தான். இப்படி ரஜினியின் அடுத்த படம் பற்றி பல ஆருடங்கள், கோலிவுட்டில் உலா வந்த நிலையில், ரஜினி அடுத்ததாக அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குனர் ரஞ்சித்துடன் இணைய இருக்கிறார் என்ற செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

லிங்கா திரைப்படம் ஏற்படுத்திய தோல்விக்குப் பிறகு பேர் சொல்கின்ற படம் அமைய வேண்டும் என்பது ரஜினி ஆசை. அதற்காக அவரது கதை விவாதக் குழு பல்வேறு இயக்குனர்களை பரிசீலித்து வருகிறது. அந்த இயக்குனர்களில் ஒருவர் தான் ‘அட்டக்கத்தி’ ரஞ்சித்.

வட சென்னை வாழ்க்கையை தனது இரண்டு படங்களில் அப்பட்டமாக காட்சிப்படுத்திய ரஞ்சித், ஒற்றை சுவரைக் கொண்டு அரசியல் பேசிய படம் தான் மெட்ராஸ். பருத்தி வீரனுக்குப் பிறகு மசாலாப் படங்களிலேயே நடித்து வந்த கார்த்திக்கு, அவரது திரை உலக வாழ்வில் மிக முக்கியமான படமாக மெட்ராஸ் அமைந்தது.

#TamilSchoolmychoice

அதன் தாக்கம் தான் ரஞ்சித்தை ரஜினியின் பக்கம் திருப்பி உள்ளது. எனினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.