Home நாடு ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணி: பாஸ் துணைத்தலைவர் மாட் சாபு கைது!

ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணி: பாஸ் துணைத்தலைவர் மாட் சாபு கைது!

632
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 5 – மே 1-ம் ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜிஎஸ்டி-க்கு எதிரான மாபெரும் பேரணி தொடர்பில் நேற்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு (மாட் சாபு) கைது செய்யப்பட்டார்.

Mohd Sabu PAS Deputy President

விசாரணைக்கு வருமாறு காவல்துறையிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, நேற்று காலை 11.30 மணியளவில் டாங் வாங்கி காவல்நிலையம் சென்ற அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

தேச நிந்தனைச் சட்டம் 1948-கீழ் தான் விசாரணை செய்யப்படவுள்ளதாகக் கூறியுள்ள மாட் சாபு, தான் செய்த குற்றம் என்னவென்று தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி பேரணி தொடர்பில்  வழக்கறிஞரும், மனித உரிமைப் போராட்டவாதியுமான அம்பிகா சீனிவாசன் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.