Home கலை உலகம் சல்மான்கான் கார் விபத்து வழக்கில் இன்று தீர்ப்பு!

சல்மான்கான் கார் விபத்து வழக்கில் இன்று தீர்ப்பு!

569
0
SHARE
Ad

salman3455முன்பை, மே 6 – இந்தி நடிகர் சல்மான் கான் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

மும்பையில் 2002 செப்டம்பர் 28-ல் சல்மான் கான் ஓட்டிச் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் ஒருவர் உயிரிழந்தார், 4 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே இன்று தீர்ப்பு அளிக்க உள்ளார். சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால்,

#TamilSchoolmychoice

குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த விபத்தின்போது, காரை தான் ஓட்டவில்லை என்று நீதிமன்றத்தில் சல்மான் கான் கூறியுள்ளார்.