கொழும்பு, மே 6 – அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இடையிலான சந்திப்பு நாளை அதிபர் மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பிற்காக சிறிசேனவினால் இரண்டு நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை காலை 10 மணிக்கு அல்லது மாலை 2 மணிக்கு இச்சந்திப்பை நடத்த அதிபர் சிறிசேனா நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு முன்னர் சபாநாயகரின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பு சந்திப்பும் கடந்த மாதம் 25-ஆம் தேதி இடம்பெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் இச்சந்திப்பு நாளை இடம்பெறுவது உறுதி என கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கும் ராஜபக்சேவிற்கும் இடையில் நாளை பிற்பகல் 1.00 மணிக்கு சந்திப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத் தொகுதியில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.