Home நாடு தேசிய மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் சிறந்த பிரதிநிதியா? – பெர்சே கேள்வி

தேசிய மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் சிறந்த பிரதிநிதியா? – பெர்சே கேள்வி

635
0
SHARE
Ad

da29

கோலாலம்பூர், மே 6 – தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எஸ்பிஎம் தேர்வில் தேசிய மொழி பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என விரிவுரையாளர் ரிதுவான் டீ பரிந்துரை செய்திருப்பதற்கு பெர்சே அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேசிய மொழியில் சிறப்பாக பேசுவதால் மட்டும் ஒருவர் மக்களின் சிறந்த பிரதிநிதியாகச் செயல்படுவார் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என பெர்சே கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கூறியதாவது;

“இதுபோன்ற நிபந்தனைகளை விதிப்பதால் மக்களால் சரியான அரசியல் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க இயலாது. இத்தகைய நிபந்தனை ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கிவிடும். ஒரு வேட்பாளருக்கு தேசிய மொழியில் பேசும், எழுதும் திறன் இருந்தால் போதும். சிறப்புத் தேர்ச்சி தேவையில்லை” என்று மரியா தெரிவித்துள்ளார்.