Home வாழ் நலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நிலக்கடலை!

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நிலக்கடலை!

1423
0
SHARE
Ad

peanutமே 6 – உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்னைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அமிலம் அதிகம் உள்ளது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்னை இருக்காது.

இதில் உள்ள மாங்கனீஸ் அமிலம், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை உண்பது நல்லது.

#TamilSchoolmychoice

நம் உணவில் இருக்கும் கால்சியம் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்கலாம்.

peanut_kernelsதினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய நரம்புகளை பாதுகாக்கிறது. இதயநோயை தடுக்கிறது.

மாரடைப்பு அபாயத்தை கட்டுப்படுத்துகிறது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்து உடலில் உள்ள தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

நிலக்கடலையில் உள்ள பாலிபனீல்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இளமையை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள நியாசின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.

Peanuts in Shell New1பபிப்டோபான் என்ற அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மன அழுத்ததை போக்குகிறது.

நாம் மிகவும் சத்தானவை என கருதும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை விட வேர்கடலை அதிக சத்து மிக்கது ஆகும். பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் இ 1, இ 12, உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.