மாஸ்கோ, மே 8 – கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த ரஷ்ய விண்கலம், பூமியின் சுற்றறுவட்ட பாதையில் நுழைந்தபோது வெடிக்க செய்யப்பட்டு விட்டது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இன்று 8-ஆம் தேதி மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5.04 மணிக்கு அது பூமியின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்ததாகவும், அப்போதே அது தகர்க்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் அதன் ஒரு சில சிறிய பாகங்கள் மட்டும் பசிபிக் கடலில் விழும் என்று எதரிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறது. எம் – 27 எம் என்ற ரஷ்யாவின் சரக்கு விண்கலம் ஏப்ரல் 28-ஆம் தேதி கசகஸ்தானில் இருந்து விண்ணிற்கு ஏவப்பட்டது.
பூமியில் இருந்து 250 மைல்களுக்கு அப்பால் இருக்கும் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு 3 டன் சரக்குகளுடன் புறப்பட்டு சென்றது.
திடீரென, அந்த விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்லாமல் பூமியை நோக்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அது வெடிக்கப்பட்டு விட்டதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.